Wednesday, January 30, 2008

இந்தியா... மஹாத்மாவை இழந்த 61வது ஆண்டு ஜனவரி 30




தனி மனிதன் முப்பது கோடி மக்களை தன் ஆன்மாவால் வளைத்து கட்டுண்ட காலம், தன் வாழ் நாள் பெரும் பகுதி மக்களுக்காகவே வாழ்ந்த மகா பெரியவர். அவர் தன் மக்களால் செல்லமாக "மகாத்மா" என அழைக்கப்பட்ட மோகன் கரம்சந்த் காந்தி.

தன் வாழ் நாள் முழுவதும் மதம், இனம் கடந்து வாழ்ந்தவர். இன்றோ, காந்திநகரை ஆள்பவர் மதம் எனும் போர்வையில் காலம் தள்ளுபவர். மதம், இனம் கடந்ததாலோ என்னவோ, தன் மத யானையால் சுட்டு கொள்ளபடுகிறார், இந்த அபலம் எங்கேனும் காணோம்.

தண்டியாத்திரை, 1930ம்ஆண்டு, தன் சபர்மதி ஆசரமத்தில் மார்ச் மாதம் 12ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 5ம் தேதி வரை சுமார் 320 கிலோமீட்டர் கடந்து தண்டி அடைந்தார் அதுவும் தன் 61ம் வயதில். நிஜமான மஹாத்மா தான்.

ஆறு ஆண்டுகால சிறை தண்டனை, 25 வருட போராட்டம், விடுதலை எனும் பரிசு. கடைசியில் 1948, ஜனவரி30,சுட்டுக் கொல்லப்பட்ட போது 'மன்னியுங்கள்' என்று அகிம்சையை போற்றினார்.

பாரத் ரத்னா, பத்ம விபுஷணன், நோபல் போன்ற பரிசுகள் தான் வேண்டாம், அவர் வகுத்த பாதையை யாவது, முட்கள் அண்டாமல், பூக்களை தூவுவோம். வாழ்க மகாத்மா,வளரட்டும் அவர் கொள்கை.

No comments: