ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் (கும்மியடி)
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே
வீட்டினி லெம்மிடங் காட்ட வந்தாரதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி கும்மியடி
பட்டங்க ளாள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினி லாணுக்கிங்கே பெண்
இளைப் பில்லை காணென்று கும்மியடி (கும்மியடி)
காத லொருவனைக் கைப்பிடித்தே யவன்
காரியம் யாவினுங் கைகொடுத்து
மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி (கும்மியடி)
Tuesday, January 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment